Saturday, June 14, 2008

கூகிள் டாக்ஸ் (Docs)& பிடிஎப் கோப்புகள்

கூகிள் டாக்ஸ் (Docs) பிடிஎப் கோப்புகளை திறக்க மற்றும் தயார் செய்ய உதவி செய்கிறது . ஆம் நீங்கள் உலகின் எந்த முலையிலும் உற்க்காந்து கொண்டு உங்கள் டாகுமென்ட் கோப்புகளையும், ஸ்பிரெட்ஷீட்களையும் கோப்புகளையும் திறந்து மற்றும் அதை எடிட் செய்ய இந்த கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் உதவுகிறது .

இப்பொழுது கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் 48 மொழிகளில் சேவையை தருகிறது . மேலும் உங்கள் PDF (Portable Document File) அவற்றையும் எழுதவும் படிக்கவும் உதவுகிறது . நீங்கள் கூகிள் டாக்ஸ் செட்டிங்சில் மொழியை தமிழ் என்று மாற்ற வேண்டும் . இப்பொழுது உங்கள் கூகிள் டாக்ஸ் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் மேலும் எழுதியதை பிடிஎப் (PDF) கோப்பாக தயாரித்து பதிவிறக்கம் செய்ய முடியும் .
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilWrite.png

உங்கள் பிடிப் (PDF) கோப்புகளை கூகிள் டாக்ஸில் திறக்க உங்கள் பிடிஎப் (PDF) கோப்புகளை மேலிறக்கம் (Upload) செய்ய வேண்டும் . உங்கள் கோப்பின் இட அளவு 2MB இருக்க வேண்டும் நீங்கள் (Browser) முலமாக மேலிரக்கம் (Upload) செய்தல்2MB அளவு இலையெனில் 10 MB அளவுக்கு மேலிரக்கம் செய்து கொள்ளலாம் .
இங்கே உங்கள் பிடிஎப் கோப்பில் உள்ள எழுத்துக்களை மட்டும் பிரதிகளாக எடுத்து கொள்ளலாம் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilread.png

கூகிள் டாக்ஸ் செல்லும் சுட்டி http://docs.google.com/

நீங்கள் புதிய பயணாளரா ? கூகிள் டாக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை பார்க்கவும் Basic Information

Monday, June 9, 2008

ஆபிளின் புதிய ஐ போன் 3ஜி

ஆபிளின் புதிய ஐ போன் 3ஜி



அதன் முன்னோட்டம்

Saturday, May 31, 2008

தமிழில் ஜிமெயில்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/tamil_gmail.png

இனிப்பான ஒரு செய்தி. கூகிள் நிறுவனம் தமிழில் ஜிமெயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதாவது இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கை முழுக்க முழுக்க தமிழ் மயமாக்கலாம்.அஞ்சல் எழுது (Compose mail),ஆவணங்கள் (Documents),நட்சத்திரமிட்டது (Starred),அனுப்பிய அஞ்சல் (Sent mail),குப்பை (Trash) இப்படி எல்லாமே தமிழ் மயமாகியிருந்தாலும் சில ஆங்கில வார்த்தைகள் மட்டும் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தமிங்கிலீஷில் வழங்கப்படுகின்றன. உதாரணம் இன்பாக்ஸ், ஸ்பேம், லேபிள்கள். இவற்றிற்கான சரியான தமிழ் வார்த்தைகள் அவர்களுக்கு கிட்டவில்லை போலும். உங்களுக்குத் தெரிந்தால் கூகிளுக்கு தெரிவியுங்கள். :)

இதுவரையாவது வந்ததற்கு கூகிளை பாராட்டலாம். உங்கள் ஜிமெயிலில் Settings போய் அங்கு Gmail display language-ல் Tamil-ஐ தெரிவு செய்தால் படத்தில் நீங்கள் பார்ப்பது போல் உங்கள் ஜிமெயில்திரை முழுக்க முழுக்க தமிழ் மயமாகும்.

மைக்ரோசாப்டின் Download Center சென்றபோது அது "தகவலிறக்க மையமாக" தமிழிலும் இருப்பதை காண நேரிட்டது

தகவல்கள் பிகேபி மற்றும் லாப்நால்

Thursday, May 29, 2008

ஆரக்களின் இலவச லினுக்ஸ்


ஆரக்களின் அன்பிரேக்கபில் இலவச லினுக்ஸ் டிவிடி

ஆம் உபுன்ட்டு மற்றும் ஒபென்சொலரிசை தொடர்ந்து ஆரகிலும் தனது லினுகசை இலவச டிவிடிக்களாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள் . ஆம் உடனே பதிவு செய்து கொள்ளவும் .

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்



Sunday, May 25, 2008

தேடுதல் இயந்திரம் மற்றும் தொகுப்புகளும்

தேடுதல் இயந்திரம்(Search Engine)

தேடுதல் இயந்திரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது . கூகிள்,யாஹூ போன்ற நிறுவனகள் இந்த இயந்திரத்தை சில வரைமுறைகளை புகுத்தி வைத்துள்ளனர் . மக்களின் தேவைகளை இணைய தளத்தில் சுலபமாக தேடி கண்டுபிடிக்கவே இந்த தேடுதல் இயந்திரங்கள் உபோயகிக்கப்படுகின்றன. இந்த தேடுதல் இயந்திரங்கள் தானாகவே ஒவ்வொரு இணைய பக்கங்களாக சென்று அந்த பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளை (Keyword) தனது சேமிப்பகத்தில் (database) வைத்துக்கொள்ளும் . எப்பொழுது மக்கள் சென்று தேடுதல் இயந்திரத்தில் தேடினால் உடனே தன்னுடைய சேமிப்பகத்தில் தேடி பதில்களை தரும் .

தொகுப்புகள் (Directory)

தொகுப்புகள் மனிதர்களால் இயக்கப்படுகின்றன சுட்டிகள் மற்றும் சுட்டியின் பயன் மற்றும் விரிவுரைகளை மனிதர்கள் தொகுப்புகளில் பதிவு செய்வார்கள் .
மேலும் மனிதர்கள் தேடுதல் சாதனத்தில் தேடுகையில் தொகுப்புகளில் இருக்கும் சுட்டிகள் அதன் விரிவுரைகளும் இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு பதில்களை தரும் .

Monday, May 19, 2008

போட்டோஷோப் மென் புத்தகம்

The Photoshop Anthology: 101 Web Design Tips, Tricks & Techniques - PDF Only

போட்டோஷோப் மென் புத்தகம் இலவசமாய் கிடைக்கிறது ஆம் குறுகிய நாட்கள் மட்டுமே கிடைக்கிறது கடைசி நாள் (Friday June 13th, 2008)
சுட்டி :
http://photoshop.aws.sitepoint.com
High-res copy in PDF format - photoshopLG.zip File Size: 64Mb
For the bandwidth conscious - photoshopSM.zip File Size: 23Mb

Sunday, May 18, 2008

Walter Gropius பிறந்தநாள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/70/Walter_Gropius_Foto_1920.jpg
கூகிள் Walter Gropius(Walter Adolph Gropius) பிறந்தநாளை சற்று வித்யாசமாக உலகுக்கே தெரியப்படுத்தியுள்ளது ஆம் வால்டேர் ஒரு கட்டட வல்லுநர் . சரி அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் . இவர் தான் ஜெர்மன் நாட்டு கட்டிட கட்டமைப்பு வல்லுநர் மற்றும் Bauhaus ("House of Building" or "Building School") நிறுவியவர் . இவர் பிறந்தநாளை கூகிள் சற்று விதய்சமாக அவர்கள் (logo)வை மாற்றி கட்டிடம் போல கண்பிதுள்ளனர் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/waltergropius.gif

Friday, May 16, 2008

நவகிரக கோவில்கள் .

கடந்த இரண்டு நாட்களாக நவகிரக கோவில்களுக்கு சென்றேன் அதனால் தான் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை .
தஞ்சை, நாகை மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), திருநள்ளாறு (சனி), திங்களுர் (சந்திரன்), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகியவையே நவக்கிரக தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதில் (சந்திரன் ) திங்களூர் மற்றும் கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய இரண்டு இடங்களை தவிர மற்ற ஏழு தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்றேன் . இந்த பயணம் மிகவும் நன்றாக அமைந்தது .

Tuesday, May 13, 2008

இலவச ஆபரேடிங் சிஸ்டம்

இலவச ஆபரேடிங் சிஸ்டம் குறுந்தகடுகள் . ஆம் இது உண்மை
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/ubuntu_logo.png” cannot be displayed, because it contains errors.
உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு முற்றிலுமாக இலவசமாக உங்கள் வீட்டு கதவுக்கு வந்து சேரும் . நான் ஒரு மதங்களுக்கு முன்னால் இணையத்தில் உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு வேண்டும் என்று உபுன்ட்டு வலயத்தில் பதிவு செய்து இருந்தேன் நான்கு வாரத்தில் எனக்கு குறுந்தகடுகள் வந்து சேர்ந்தன .
உங்களுக்கும் குறுந்தகடுகள் வேண்டுமா ? அப்படி என்றல் உடனே
பதிவு
செய்யுங்கள்.

The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/sunsmall.gif” cannot be displayed, because it contains errors.
ஓப்பன்சொலரிஸ் : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஓப்பன்சொலரிஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகபட்தியுள்ளது . மேலும் உப்ன்ட்டு செய்த மார்கெட்டிங் தந்திரத்தை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் முயன்று வருகிறது . ஆம் ஓப்பன்சொலரிஸ் என்னும் இலவச ஆபரேடிங் சிஸ்டத்தை இலவச குறுந்தகடுகளாக விட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. உங்கள்ளுக்கும் குறுந்தகடு வேண்டுமா ? உடனே பதிவு செய்யுங்கள்